பத்துக் கற்பனைகள்

தேவனுடைய பத்துக் கற்பனைகள்

[குறிப்புரை: யாத்_20:1-17, உபா_5:4-21]


உன் தேவனாகிய யெஹோவா நானே.
 1. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
 2. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.
 3. என்னுடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.
 4. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; ஏழாம்நாளிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
 5. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
 6. கொலை செய்யாதிருப்பாயாக.
 7. விபசாரம் செய்யாதிருப்பாயாக.
 8. களவு செய்யாதிருப்பாயாக.
 9. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
 10. பிறனுடைய மனைவியையும், அவனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய மிருகஜீவனையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.

ஜெபம்

யெஹோவா தேவனே,
 1. உம்மையன்றி எனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கக்கூடாது.
 2. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நான் எனக்கு உண்டாக்கக்கூடாது; நான் அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் கூடாது.
 3. நான் உம்முடைய நாமத்தை வீணிலே வழங்கக்கூடாது.
 4. நான் ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைக்கவேண்டும்; ஏழாம்நாளிலே நானானாலும், என் குமாரனானாலும், என் குமாரத்தியானாலும், என் வேலைக்காரனானாலும், என் வேலைக்காரியானாலும், என் மிருகஜீவனானாலும், என் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யக்கூடாது.
 5. நான் என் தகப்பனையும் என் தாயையும் கனம்பண்ணவேண்டும்.
 6. நான் கொலை செய்யக்கூடாது.
 7. நான் விபசாரம் செய்யக்கூடாது.
 8. நான் களவு செய்யக்கூடாது.
 9. நான் பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லக்கூடாது.
 10. நான் பிறனுடைய மனைவியையும், அவனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய மிருகஜீவனையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சிக்கக்கூடாது.
ஆமேன்.

Comments